Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமானப் சேவை ஊழல் தொடர்பில் விசாரணை செய்ய ஆணைக்குழு நியமனம்

In இலங்கை
Updated: 16:00 GMT, Feb 14, 2018 | Published: 16:00 GMT, Feb 14, 2018 |
0 Comments
1095
This post was written by : poovannan
Maithripala.Sirisena.1.000

ஶ்ரீ லங்கன் விமான சேவை, ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இன்று (புதன்கிழமை) நியமனம் வழங்கப்பட்டது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் கடந்த 2006 ஜனவரி 06 முதல் 2018 ஜனவரி 31 வரையான காலப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

இந்த விசாரணைக்குழுவில், தலைவராக அனில் குணரத்ன (ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி), உறுப்பினர்களாக ஈ.ஏ.ஜி.ஆர்.அமரசேகர (ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிபதி), பியசேன ரணசிங்க (ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி), எம்.டி.ஏ.ஹெரால்ட் (ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர்), டப்ளியூ.ஜே.கே. கீகனகே (இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு தர கண்காணிப்பு சபை பணிப்பாளர் நாயகம்) ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)