Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தவறான பாதையில் முஸ்லிம் சமூகத்தை வழி நடத்த முயற்சி -ஜி.எல்.பீரிஸ்

In இலங்கை
Updated: 16:33 GMT, Feb 14, 2018 | Published: 16:33 GMT, Feb 14, 2018 |
0 Comments
1156
This post was written by : poovannan

நாட்டில் முஸ்லிம்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து பொதுபல சேனா, பொதுஜன பெரமுனவிற்கு முகப்புத்தகம் ஊடாக ஆதரவான பதிவொன்றை பிரசுரித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கண்டியிலுள்ள உக்கிராசபிட்டிய மற்றும் அகலவத்தையிலுள்ள வெயான்கல்ல ஆகிய பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கவில்லை என்பதற்காக சில முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டதாக இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் என்.எம்.அமீனை மேற்கொள் காட்டி பத்திரிகைகளில் சில செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பதிலளித்த ஜி.எல்.பீரிஸ் அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய வியூகங்கள் மூலமாக முஸ்லிம் சமூகத்தை முன்னாள் ஜனாதிபதியினால் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக நிகழ்ந்தமையை அவர் நினைவூட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg