Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார்! – சுதந்திரக் கட்சி

In இலங்கை
Published: 02:19 GMT, Feb 15, 2018 |
0 Comments
1451
This post was written by : Varshini

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் இலங்கை அரசியலில் ஏதிர்பாராத மாற்றங்களை தோற்றுவித்து வரும் நிலையில், அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு பிரதான கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் பலம் இல்லாததால் சிறு கட்சிகளின் ஆதரவை குறிவைத்துள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே சுதந்திரக் கட்சி இத்தகவலை குறிப்பிட்டுள்ளது.

தனித்து ஆட்சியமைக்கும் யோசனையை ஐ.தே.க. முன்வைத்ததைத் தொடர்ந்து, அதனைத் தகர்த்தெறிந்து ஏனைய கட்சிகள் ஆட்சியமைக்க முனைவதோடு, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவரை பிரதமராக நியமித்து ஆட்சியமைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் நேற்று ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதிக்கு நிபந்தனைகளுடனான ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுனவும் உள்ளதோடு, கட்சி மட்டத்தில் அதுகுறித்து ஆராய்ந்து வருகின்றது.

அத்தோடு, இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் தொடர்ந்து பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறாயினும், இரு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்பதே பெரும்பான்மையானவர்களின் கருத்தாக உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)