Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முக்கிய சந்திப்பு!

In இலங்கை
Updated: 05:31 GMT, Feb 15, 2018 | Published: 02:40 GMT, Feb 15, 2018 |
0 Comments
1183
This post was written by : Varshini
sri-lanka-president-maithripala-sirisena3

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியலில் புயலை எழுப்பியுள்ள நிலையில் நடைபெறும் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

நாட்டின் எதிர்கால அரசியல் தொடர்பில் இன்று அல்லது நாளை ஜனாதிபதி மைத்திரி முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று நடைபெறும் சந்திப்பில் கலந்துரையாடப்படும் விடயங்கள் அது சார்ந்ததாக அமையலாமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)