Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகல்

In
Updated: 04:02 GMT, Feb 15, 2018 | Published: 04:02 GMT, Feb 15, 2018 |
0 Comments
1194
This post was written by : Elakkiya

ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஷூமா கட்சியின் பலத்த அழுத்தங்களுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளார்.

ஜனாதிபதி பதவியிலிருந்து தான் உடனடியாக விலகுவதாக தொலைக்காட்சி ஊடாக அறிவிப்பு வெளியிட்ட ஜேகப் ஷூமா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய ஜேகப் ஷூமாவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தீர்மானித்திருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி சிரில் ராமபோசா இன்றோ, நாளையோ ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg