Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்காவின் புதிய ஜனாதிபதியானார் சிரில் ரமபோசா!

In
Updated: 19:13 GMT, Feb 15, 2018 | Published: 19:13 GMT, Feb 15, 2018 |
0 Comments
1152
This post was written by : Litharsan

தென்னாப்பிரிக்க  ஜனாதிபதி ஜேக்கப் ஷூமா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய  ஜனாதிபதியாக துணை அதிபர் சிரில் ரமபோசா பதவியேற்றுள்ளார்.

புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டத்திலேயே அவர் தெரிவுசெய்யப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதியாக  ஜேக்கப் ஷூமா கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். எனினும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன் தென்னாபிரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அத்தீர்மானத்தின் வாக்கெடுப்பில் அவர் தோல்வியடையும் நிலையும் உருவாகியது.

எனவே அவர் வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும் கட்சி வலியுறுத்தியது. முதலில் மறுத்த ஷூமா பின்னர் வேறு வழியின்றி பதவி விலகினார்.

அந்நிலையில் துணை ஜனாதிபதியான சிரில் ரமபோசா அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், அவர் ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg