Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒட்டு மொத்த கேள்விகளுக்கும் ஒரே பிறப்பிடம் கனவு!

In
Updated: 14:56 GMT, Feb 17, 2018 | Published: 14:56 GMT, Feb 17, 2018 |
0 Comments
1153
This post was written by : Puvanes

கனவு எனப்படுவது இன்றுரையிலும் ஆய்வாளர்களுக்கு மிகுந்த சவாலான விடயமாகவே காணப்படுகின்றது. ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல சராசரி மணிதர்கள் அனைவருக்குமே இந்தக் கனவு புரியாததோர் புதிர் மட்டுமே.

கனவு என்பது ஏன்? எதற்கு? என்ன? யார்? என்பது மட்டுமல்லாமல் உச்சகட்ட குழப்பத்திற்கு அவசியமாக அனைத்து கேள்விகளையும் ஒரே கேள்வியாக முன்வைக்கும் விடயம்.

கனவு என்பது சுவாரசியம் மிகுந்தது ஒரு சிலருக்கு சில பிடித்தமான கனவுகள் இடையில் கலைந்து விட்டால் மீண்டும் அதனைக் கொண்டு வந்து சேர்க்க பிரம்பப் பிரயத்தனம் செய்வார்கள் என்றாலும் அதனால் பயன் எதுவும் இல்லை. கனவை பற்றி தெளிவாக கூறுவதானால் “எப்பொது வரும், எப்படி வரும் எதற்காக வரும் என்று சரியாக கூற முடியாது ஆனால் கண்டிப்பாக வந்தே தீரும் என்று கூறலாம்.

சராசரியாக ஒரு மனிதன் ஒவ்வொரு நாள் இரவும் 4 முதல் 6 கனவுகளைக் கண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஒருவருடத்திற்கு 1460 தொடக்கம் 2190 கனவுகள் உறக்கத்தின் போது மனிதர்களுக்கு வந்து செல்கின்றன. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு கனவும் 5 முதல் 30 நிமிடங்கள் வரையிலும் நீடிக்கின்றன.

இவற்றில் 95 சதவீதம் முதல் 99 சதவீதமான கனவுகளை உறக்கத்தில் இருந்து விழிக்கும் முன்னரே மூளை மறந்துவிடும். அது மட்டுமல்லாது எப்போதாவது கண்ட முகங்களைக் கொண்ட கனவுகளையே மூளை தயாரிக்கும் புதிய முகங்களை மூளை கனவுகளுக்காக நெய்வதில்லை என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.

அதுமட்டுமன்றி 12 சதவீனமானவர்கள் கறுப்பு வெள்ளை நிறத்திலேயே தங்கள் கனவுகளை காண்கின்றனர்.

கனவுகளை தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாரு அமைத்துக்கொள்ள முடியும் என்பதும் சுவாரசியமான விடயம் Lucid Dreaming என்ற கனவு முறையினை கற்றுக் கொள்ளும் போது தனக்கு பிடித்தமான கனவினைக் காணவும் முடியும்.

பிடித்தமான கனவை காண மட்டுமே முடியும் கனவு இதன் மூலம் நிறைவேறாது என்பது முக்கியம். இதன் மூலம் அபாயகரமான கனவுகளை தவிர்க்க முடியும் என்பதோடு நிம்மதியான உறக்கம் பெற முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg