Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூகுள் பற்றி தெரியாத இரகசியம்!

In
Updated: 15:00 GMT, Feb 17, 2018 | Published: 15:00 GMT, Feb 17, 2018 |
0 Comments
1145
This post was written by : Puvanes

தற்போதைய உலகில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான கூகுள் தொடர்பில் அனைவரும் அறிந்து கொள்ளாத ஆச்சரியமளிக்கும் பலவிடயங்கள் காணப்படுகின்றன.

அடுத்த தெருவின் விலாசத்தையும் கூட தற்போது கூகுளில் தட்டச்சு செய்து தேடுதல் நடத்தும் காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் கூகுளானது அதன் தேடுபொறியில் தேடப்படும் விடயங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ளும். யார்? எங்கிருந்து? என்ன? எதற்காக போன்ற அனைத்து விடயங்களும் கூகுளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இணையப்பாவனையில் உள்ள அனைவர் பற்றியும் அதாவது ஒருவரது தனிப்பட்ட விடயங்கள், மற்றும் முகவரிகள், வர்த்தக நடவடிக்கைகள், ஐபி முகவரிகள் போன்ற அனைத்தும் கூகுளின் மிகப்பெரிய சேர்வரின் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

தற்போது வரையிலும் பாதிப்புகள் ஏற்படாத மட்டத்திலேயே இந்தத் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இதில் ஆச்சரியமான விடயம் யாதெனின் கூகுள் வியாபாரப் போட்டி இல்லாத நிலையில் இந்த தகவல்களைப் பாதுகாத்துக்கொள்ளும்.

தனது நிறுவனத்திற்கு மோசமான நிலை ஏற்படும் இடத்து இந்த தனிப்பட்ட தகவல்கள் குறித்து கூகுள் நிச்சயமாக கவலை கொள்ளாது. பாதுகாப்புகள் கேள்விக்குறியாகலாம்.

முக்கியமாக கூகுள் எனப்படுவது சேவை நிறுவனம் அல்ல நூற்றுக்கு நூறுசதவீத வியாபார நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தளம். அதன் விளம்பரங்கள் இதனை உறுதிபடுத்தும்.

மேலும், LiveTraffic எனப்படும் செயற்பாடு என்பதற்காக தனிப்பட்ட ஒருவரது கையடக்கதொலைபேசியின் Anonymous cell phone data அதாவது பெயர் அறியப்படாத தகவல் சேமிப்பினை கூகுள் செய்கின்றது. இதன் மூலம் தரவுகள் பறிமாற்றமடையும்.

என்றாலும் இது சேவை என்ற வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றது எனினும் தனிமனிதர் ஒருவர் இத்தகைய செயற்பாட்டை மேற்கொண்டார் அது தண்டனைக்குறிய மிகப்பெரிய குற்றமாகும். (அந்தரங்க ஊடுருவலாக இது அடையாளப்படுத்தப்படும்)

அதற்காக கூகுளை பயன்படுத்தாமல் விட்டுவிடுவதா என்ற கேள்விக்கு பதில் இல்லை எனினும் தத்தமது தேடு பொறியில் சில மாற்றங்களை செய்து கொள்ளுமிடத்து இத்தகைய தகவல் சேமிப்புகளை அழித்துக் கொள்ளமுடியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg