Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்பம்!

In
Updated: 15:05 GMT, Feb 17, 2018 | Published: 15:05 GMT, Feb 17, 2018 |
0 Comments
1167
This post was written by : Puvanes

தற்போதைய உலகத்தின் முக்கிய இரு பிரச்சினைகளாக காணப்படுவது ஒன்று குடிநீர் மற்றொன்று புற்றுநோய். இது இரண்டும் மனித குலத்திற்கே சவால் விடும் வகையில் அமைந்துள்ளன.

நாளுக்கு நாள் புற்று நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது இதற்கு மாற்றாக பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் வெற்றி எந்த அளவிற்கு என்பது தெரியவில்லை.

அதேபோன்று குடிநீர்…. அதிகரிக்கும் வெப்பநிலையினால் குடி நீர் எதிர்காலத்தில் குடி நீருக்கான பிரச்சினை அதிகரிக்கும் என்பது ஆய்வுத் தகவல்கள்.

அந்தவகையில் இந்த இரு பாரிய பிரச்சினைகளும் கூடிய விரைவில் தீர்க்கப்படும் என்றே தெரியவருகின்றது. வளர்ந்து வரும் தொழில் நுட்பம் அதற்கான தீர்வுகளைச் சுமந்து நிற்கின்றன.

உடலின் உட்பகுதிகளில் காணப்படும் புற்றுநோய் கட்டிகளை அழிக்கக்கூடிய நனோ வகை ரோபோக்களை தற்போது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

புற்றுநோய் கட்டிகளுக்கு வழங்கப்படும் இரத்த ஓட்டத்தினை இந்த ரோபோக்கள் தடை செய்து விடுவதனால் அதனால் புற்று நோய் கட்டிகள் அழிவடைகின்றன.

அதேபோன்று தற்போது 2.1 பில்லியன் மக்கள் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு சில நாடுகள் குடி நீரைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களையும் பிறப்பித்துள்ளன என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இவ்வாறான நிலையில் அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் மிகக்குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக மாற்றும் வடி கட்டி ஒன்றினை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

Graphair எனப்படும் இந்த வடிகட்டி செலவு குறைந்தது மாத்திரமல்ல தற்போது பாவனையில் உள்ள ஏனைய வடிகட்டிகளையும் விட 99 சதவீதம் வேகமாக நீரை வடிகட்டக்கூடியது. இதன் மூலம் கடல் நீரை இலகுவாக குடிநீராக மாற்றலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக உலகின் சவாலான பிரச்சினைகளுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எதிர்கால உலகில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும் என்பது உறுதியாகிக் கொண்டே வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg