Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக யுத்தம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது! – பிரமிக்க வைக்கும் கேள்வி

In
Updated: 15:25 GMT, Feb 17, 2018 | Published: 15:25 GMT, Feb 17, 2018 |
0 Comments
1163
This post was written by : Puvanes

இன்று வரை அறியலாளர்களாலும், விஞ்ஞானிகளாலும் விடை கொடுக்க முடியாத கோட்பாடுகளில் ஒன்றே நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு (Intelligent design) எனப்படுகின்றது.

பேரண்டம் அதன் இயக்கங்கள், உயிரினங்கள் அனைத்துமே நுண்ணறிவு கொண்ட ஓர் வடிவமைப்பே, என்பதே நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு என்பது ஆகும்.

இந்தக் கோட்பாட்டினை ஒருசாரர் பாடங்களாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், மற்றொரு பக்கம் அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் இதனை எதிர்த்து வருகின்றனர்.

காரணம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அதே சமயம் மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விடயமாகவே இந்த நுண்ணறிவுக் கொள்கை காணப்பட்டு வருகின்றது.

அதாவது உலகில், பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு எனவும், அனைத்துமே ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படுகின்ற விடயம் என்றும் நுண்ணறிவுக் கோட்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த நொடி நடக்கப்போகும் விடயம், அல்லது சம்பவம் அனைத்தும் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டது என இந்த கோட்பாட்டாளர்கள் வாதிட்டு வருகின்றனர். இதற்கு உதாரணமாக ஹிட்லரின் வரலாற்றை முன்வைக்கின்றனர்.

முதலாம், மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் முன்னணி இடத்தினை வகிப்பவர் ஹிட்லர். இவரினால் பல கோடிக்கணக்கான உயிர்கள் பலியாகியிருந்தன எனினும் இந்த யுத்தம் ஏற்பட வேண்டும் என ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதால் நடத்தப்பட்டது என நுண்ணறிவுக் கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஹிட்லர் எனப்படுபவர் ஆரம்பத்தில் இராணுவத்தின் மீது பற்று கொண்டவர் அல்ல அவர் சிறந்த ஓவியர். 1908ஆம் ஆண்டுகளில் தான் வரைந்த சிறப்பான ஓவியங்களை கலைக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அச்சமயம் கலைக்கல்லூரி படிப்பிற்கான தேர்வுகள் நடைபெற்ற காலம். அவருடைய ஓவியங்கள் மிகச் சிறப்பானவை அது மட்டுமன்றி அவர் கலைக்கல்லூரியில் கல்வி கற்க தகுதியும் பெற்றிருந்தார்.

எனினும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹிட்லர் கலைப்படிப்பு தொடர்வதற்காக கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போதும் அவருக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ள அதற்கான காரணங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

அதன் பின்னரே ஹிட்லர் இராணுவத்தில் இணைந்தார். கொடூர யுத்தங்களுக்கு பெயர் பெற்றார் கோடிக்கணக்கான உயிர்கள் இறக்க காரணமாக இருந்தார். அன்று அவருக்கு கல்லூரி வாய்ப்பு கிடைத்திருந்தால் உலக வரலாறே மாற்றப்பட்டிருக்கும்.

அதன் படி அனைத்துமே திட்டமிட்டபடியே இயக்கப்படுகின்றன என நுண்ணறிவுக் கோட்பாட்டாளர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

இவற்றினை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் இல்லை என்ற தீர்க்கமான முடிவை நிறுவ முடியாது பல நூற்றாண்டுகளாக திணறிவருகின்றனர்.

இந்த நுண்ணறிவுக் கோட்பாட்டிற்கு மாற்று வகையில் அண்ட உருவாக்கம் பற்றி அறிவியல் ரீதியாக விளக்கம் கூற முற்பட்டு ஹிக்ஸ் போசன் (Higgs Boson) எனப்படும் ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

அணுக்களை மோதவிட்டு அதில் இருந்து வரும் வெடிப்பு மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி நிறுவ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். எனினும் அதற்கான வெற்றி கிட்டவில்லை.

எவ்வாறாயிலும் உலகத்தையே இன்றுரை வியப்பில் ஆழ்த்தும் பல மர்மங்களில் ஒன்றாக நுண்ணறிவுக் கோட்பாடு காணப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg