Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரி-ருவென்ரி போட்டியிலாவது வெற்றி கிடைக்குமா? தென்னாபிரிக்கா ஏக்கம்

In கிாிக்கட்
Updated: 17:26 GMT, Feb 17, 2018 | Published: 17:26 GMT, Feb 17, 2018 |
0 Comments
1204
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், தென்னாபிரிக்க அணிக்கு டுமினியும், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்குகின்றனர்.

இந்தியாவுடனான தொடரையடுத்து அவுஸ்ரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா விளையாடவுள்ளதால் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தென்னாபிரிக்க அணியில், கிறிஸ்டியன் ஜோன்கர், ஜூனியர் டலா மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகிய வீரர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில், சுரேஷ் ரெய்னா நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கவுள்ளார். சர்துல் தாகூர் அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளார்.
மூன்று போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரின், அடுத்த போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg