Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி – ரவிசாஸ்திரி

In கிாிக்கட்
Updated: 04:50 GMT, Feb 18, 2018 | Published: 04:50 GMT, Feb 18, 2018 |
0 Comments
1256
This post was written by : Litharsan

உலகின் சிறந்த தடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது, “இரு நாட்டு அணிகளின் சாதனைகளைப் பார்க்கும் போது தென்னாபிரிக்கா மிகச்சிறந்த அணிகளில் ஒன்று என்பது தெரியும். தொலைக்காட்சி வர்ணனையாளராக இருந்தபோது தென்னாபிரிக்க அணியின் பல போட்டிகளைப் பார்த்திருக்கிறேன்.

அந்தவகையில் தென்னாபிரிக்கா அணிக்கெதிராகக் கிடைத்த வெற்றியின் ஒவ்வொரு தருணத்தையும் எங்களது வீரர்கள் உற்சாகமாகக் கொண்டாட வேண்டும்.

அணித்தலைவர் விராட் கோஹ்லியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. புதிய ஆங்கில அகராதியை வாங்கித் தான் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

வலுவான தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சுக்கு எதிராக 6 போட்டிகளில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருக்கிறார். அவரின் பங்களிப்பு மிகச்சிறத்தது. அவர் தான் இப்போது உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று சொல்வதில் பெருமையடைகின்றேன். அந்த வெற்றியின் எல்லாப்புகழும் விராட் கோஹ்லியையே சாரும்’ என்று அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg