Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லங்கன் பிரீமியர் லீக் தொடருக்கான அறிவிப்பு வெளியானது

In
Updated: 06:29 GMT, Feb 18, 2018 | Published: 06:29 GMT, Feb 18, 2018 |
0 Comments
1234
This post was written by : Litharsan

இலங்கையில் நடத்தப்படும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

6 அணிகள் பங்குபற்றவுள்ள இப்போட்டித் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதிவரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நடைபெற்றுவரும் பிரீமியர் லீக் தொடரைப் போன்று இந்தத் தொடரிலும் இலங்கை மற்றும் ஏனைய நாட்டு அணி வீரர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டிகள் ஆர்.பிரேமதாஸ, தம்பளை, பல்லேகல மற்றும் சூரியவெவ ஆகிய சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடத்தப்படவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg