Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய லண்டன் குடியிருப்புத்தொகுதியில் தீ

In
Updated: 07:04 GMT, Feb 18, 2018 | Published: 07:04 GMT, Feb 18, 2018 |
0 Comments
1201
This post was written by : Suganthini

மத்திய லண்டனிலுள்ள குடியிருப்புத்தொகுதியொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்ட நிலையில்,   தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக, தீயணைப்புப் படைவீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மாடிக் கட்டடத்தில் எரிவாயுச் சிலிண்டரொன்று நேற்று (சனிக்கிழமை) வெடித்ததைத் தொடர்ந்து, பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

இதன்போது, மேற்படி பகுதியில் ஒரே கரும்புகை மூட்டம் காணப்பட்டதாகத் தெரிவித்த தீயணைப்புப்ப படை வீரர்கள், தரைப்பகுதி கட்டடம், முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் தீக்கிரையானதாகவும் கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்தத் தீ விபத்துக் காரணமாக எவரும் எந்தவிதப் பாதிப்பையும் எதிர்நோக்காமல் தப்பியுள்ளதாகவும், தீயணைப்புப் படை வீரர்கள் கூறியுள்ளனர்.

தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் 50 பேரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg