Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

In
Updated: 07:26 GMT, Feb 18, 2018 | Published: 07:26 GMT, Feb 18, 2018 |
0 Comments
1289
This post was written by : Suganthini

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் 4.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, பிரித்தானிய புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள ஸ்வான்சீ நகரிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 20 கிலோமீற்றர் தூரத்திலும் 7.4 கிலோமீற்றர் ஆழத்திலும் நேற்று (சனிக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டதுடன்,  வேல்ஸ், மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், புவியியல் நிலையம் கூறியுள்ளது.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாக, எந்தவிதத் தகவலும்    இதுவரையில்  இல்லை.

பிரித்தானியாவில் சுமார் 10 வருடங்களின் பின்னர், வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. பிரித்தானியாவின் லின்கோன்ஷயர், மார்கட் ரெஸன்  (Market Rasen, Lincolnshire) பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு 5.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg