Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனியை முற்கூட்டியே களமிறக்கலாம் – கோஹ்லிக்கு ஷெவாக் ஆலோசனை!

In கிாிக்கட்
Updated: 11:29 GMT, Feb 18, 2018 | Published: 11:29 GMT, Feb 18, 2018 |
0 Comments
1249
This post was written by : Litharsan

இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க டோனியை முன்கூட்டியே துடுப்பெடுத்தாட களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர் விரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் தெரிவிக்கையில், டோனியை 4 ஆவது வீரராக களமிறக்கி அவர் ஆட்டமிழந்தால் நடுவரிசைத் துடுப்பாட்டத்திற்கு யாரை பயன்படுத்துவது என்ற அச்சம் கோஹ்லிக்கு உள்ளது.

இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் பலமாக இருப்பதால் டோனியை முதலில் களமிறக்கிவிட்டு டோனியின் இடத்திற்கு முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களை களமிறக்கலாம்’ என்று தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg