Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனியிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள விரும்பும் இங்கிலாந்து வீரர்!

In கிாிக்கட்
Updated: 11:49 GMT, Feb 19, 2018 | Published: 11:49 GMT, Feb 19, 2018 |
0 Comments
1174
This post was written by : Litharsan

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனியிடமிருந்து தான் விக்கெட் காப்பாளர் தொடர்பான விடயங்களைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ஷாம் பிலிங்ஸ் தெரிவித்துள்ளார்.

டோனி சிறந்த விக்கெட் காப்பாளராக உள்ளதால் அவரிடமிருந்து அதன் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஐ.பி.எல் தொடரில் மிகச்சிறந்த அணிக்காக நான் விளையாடவுள்ளமை எனக்கு உற்சாகமளிக்கிறது.

அனுபவமிக்க வீரர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக விக்கெட் காப்பாளராக டோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பலவுள்ளன. அவரின் மின்னல் வேக ஸ்டெம்பிங் ரகசியத்தைத் திருடவும் தயாராகவுள்ளேன்.” என்றார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் ஷாம் பிலிங்ஸ் சென்னை அணியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg