Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்தில் சூறாவளி!: அவசரகாலநிலை பிரகடனம்

In உலகம்
Updated: 07:05 GMT, Feb 20, 2018 | Published: 07:05 GMT, Feb 20, 2018 |
0 Comments
1254
This post was written by : Suganthini

நியூஸிலாந்தின் கரையோரப் பிரதேசமான கிறிஸ்ட்சேர்ச் (Christchurch) பிரதேசத்தில் பாரிய சூறாவளி தாக்குதவதற்கான அபாயம் காணப்படும் நிலையில், அப்பகுதியில் அவசரகாலநிலையை நியூஸிலாந்து அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

மேற்படி பிரதேசத்தில் கீட்டா (Gita) எனப் பெயரிடப்பட்டுள்ள சூறாவளி இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது, நாளை காலை தாக்குவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன், இதன்போது, மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும், கிறிஸ்ட்சேர்ச் மேயர் Lianne Dalziel எச்சரித்துள்ளார்.

நியூஸிலாந்தில் அடை மழை பெய்துவரும் நிலையில், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள வீடுகளினுள் வெள்ளம் புகுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும், ஆகவே, தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்களை தங்களை வசிப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சூறாவளி அபாயம் காரணமாக, கிறிஸ்ட்சேர்ச் பிரதேசத்திலுள்ள 12க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், வீதிகளூடான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. அத்துடன், நியூஸிலாந்து தேசிய ஏயார்லைன்சேவையும் தமது விமானப் போக்குவரத்துகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg