Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றில் மோதல் – பதவியை துறப்பதாக விமல் அறிவிப்பு!

In இலங்கை
Updated: 08:25 GMT, Feb 20, 2018 | Published: 07:49 GMT, Feb 20, 2018 |
0 Comments
1423
This post was written by : Puvanes

‘நாட்டு மக்கள் எமக்கு நல்லதோர் பாடத்தினை புகட்டியுள்ளனர், என்றாலும் தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கம் தோல்வியடையவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்

நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், இப்போது ஊழல்களையும், திருட்டுகளையும் பற்றி விமர்சித்துக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் அரசாங்க நிறுவனத்தின் பணத்தைக் கொண்டு, தமக்கையின் மகளின் திருமண நிகழ்வுகளை நடத்திய அமைச்சர்களும் பதவியில் ஒரு காலத்தில் இருந்தார்கள் என ராஜித குற்றம் சுமத்தினார்.

அவரின் இந்தக் கருத்துகளைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கூச்சல் அதிகரிக்கவே, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவே கடந்தகாலத்தில் அவ்வாறான திருமண நிகழ்வை நிகழ்த்தியதாகவும் ராஜித குற்றம் சுமத்தினார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என ஆத்திரத்தோடு குறிப்பிட்ட விமல் வீரவங்ச, இவ்வாறு ஆதாரமற்ற போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், அவ்வாறு தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினை நாளையே ராஜித சேனாரத்ன நிரூபிப்பார் எனின் அக்கணமே தனது நாடாளுமன்றப் பதவியினை துறந்து விடுவதாகவும் விமல் வீரவங்ச பகிரங்க அறிவிப்பினை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg