Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித்!

In சினிமா
Updated: 09:40 GMT, Feb 20, 2018 | Published: 09:20 GMT, Feb 20, 2018 |
0 Comments
1086
This post was written by : Velauthapillai Kapilan

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது தடவையாக இணையும் ‘விசுவாசம்’ திரைப்படம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. குறிப்பாக ‘விசுவாசம்’ படத்திற்காக அஜித் நேற்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

அஜித் நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து 4 மாதங்களில் படப்பிடிப்பை நிறைவுசெய்யவுள்ளதாகவும, திரைப்படத்தை இவ்வருடம் தீபாவளிக்கு வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு செய்தி கசிந்துள்ளது. மேலும், படத்தில் அர்ஜுனை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் படத்தை  4 மாதங்களில் முடிக்க வேண்டும் என்பது அஜித் மற்றும் அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg