Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தகுதியற்ற மருத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – குணசீலன்

In இலங்கை
Updated: 10:18 GMT, Feb 20, 2018 | Published: 10:18 GMT, Feb 20, 2018 |
0 Comments
1316
This post was written by : Litharsan

வவுனியாவில் தனியார் சிகிச்சை என்ற பெயரில் தகுதியற்ற மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதாக பொது மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை ஆராய்ந்து அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக வட. மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தரம் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வட. மாகாணத்தில் வைத்திய உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பல பிரச்சனைகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்ய தொடர்ந்தும் எங்களால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதனைவிட வவுனியாவில் தனியார் சிகிச்சை என்ற பெயரில் தகுதியற்ற மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் வேறு துறைகளில் சித்தி பெற்றவர்கள் அதற்குத் தொடர்பில்லாத வைத்தியத் துறைகளை மேற்கொள்வதாகவும் பொதுமக்களினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தகுதியற்றவர்கள் வைத்திய துறையில் ஈடுபடுவதாகக் கூறி கல்வித் தகைமை அல்லது வைத்திய நிபுணத்துவத்தின் தகுதியற்றவர்கள் விபரங்களுடன் வவுனியா வைத்தியர்கள் எனக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளனர்.

எனவே நாம் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg