Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அல்ஃபோன்சோ நியமனம்

In கிாிக்கட்
Updated: 08:47 GMT, Feb 21, 2018 | Published: 08:47 GMT, Feb 21, 2018 |
0 Comments
1144
This post was written by : Elakkiya

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆபிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அல்ஃபோன்சோ தோமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேற்கிந்திய கிரிக்கட் இயக்குனர் ஜிம்மி ஆடம்ஸ், “நாம் அணியின் செயற்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றோம். அதேபோன்று பிராந்தியத்தில் பயிற்சி நிபுணத்துவத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கின்றோம். இந்த ஆண்டு நாம் முக்கிய போட்டிகளையும் தொடர்களையும் கொண்டுள்ளோம். இந்நிலையில் புதிய பயிற்சியாளர் நியமனம் இந்த ஆண்டு தொடர்கள் மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியை பலப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

தோமஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு ரி-ருவென்ரி போட்டியில் விளையாடியுள்ளார். 41 வயதான இவர் சோமர்செட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஐ.பி.எல். மற்றும் பிக் பாஷ் லீக் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg