Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணியில் தேர்வாகவில்லை- தற்கொலை செய்துகொண்ட இளம் வீரர்!

In கிாிக்கட்
Updated: 09:15 GMT, Feb 21, 2018 | Published: 09:15 GMT, Feb 21, 2018 |
0 Comments
1213
This post was written by : Elakkiya

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அமீர் ஹனீப்பின் மகன் மொஹமட் ஷர்யாப் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையோர் கிரிக்கட் அணியில் தெரிவாகவில்லை என்பதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய ஹனீப் இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், இளையோர் கிரிக்கட் அணியில் தெரிவாகவில்லை என்பதை அறிந்து தனது மகன் மனம் சோர்வடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் லாகூரில் நடைபெற்ற இளையோர் கிரிக்கட் தொடரில் கராச்சி அணியை பிரதிநிதித்துப்படுத்தி விளையாடிய மொஹமட் ஷர்யாப் காயம் காரணமாக பின்னர் வீடு திரும்பினார். எனினும் மீண்டும் அணியில் தேர்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.

இவ்வாறிருக்க இளையோர் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான வயதெல்லையை கடந்துவிட்டார் என்ற அடிப்படையில் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg