Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தரப்பு ரி-ருவென்டி தொடரை வென்றது அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Updated: 10:02 GMT, Feb 21, 2018 | Published: 10:02 GMT, Feb 21, 2018 |
0 Comments
1258
This post was written by : Elakkiya

நியூசிலாந்தில் நடைபெற்று வந்த முத்தரப்பு ரி-ருவென்டி தொடரில், அவுஸ்திரேலிய அணி கிண்ணம் வென்றுள்ளது.

ஆக்லாந்த்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொண்ட அவுஸ்ரேலியா டக்வேர்த் லூயிஸ் முறையில் 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து, 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் டெய்லர் 43 ஓட்டங்களையும், முன்றோ 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஆஸ்டன் அகர் 3 விக்கட்டுக்களையும், ரிச்சர்ட்ஸன் மற்றும், டைய் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிய போது, மழைக் குறுக்கிட்டது. அவுஸ்திரேலிய அணி 14.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, தொடர்ச்சியாக பெய்த மழையினால் போட்டி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து போட்டியை நடத்துவதற்கான ஏதுநிலை இல்லாததால் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய அவுஸ்திரேலிய அணி 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக அர்சி சோர்ட் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, மெக்ஸ்வெல் 20 ஒட்டங்களுடனும், பின்ச் 18 ஓட்டங்களுடனும் அட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

மூன்று விக்கட்டுக்களை வீழ்த்திய ஆஸ்டன் அகர் போட்டியின் நாயகனாக தெரிவாக, மக்ஸ்வெல் தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி ரி-ருவென்ரி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg