Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரேல் – பலஸ்தீன சர்ச்சை: சர்வதேச மத்தியஸ்தத்துக்கு அழைப்பு

In உலகம்
Updated: 11:05 GMT, Feb 21, 2018 | Published: 11:05 GMT, Feb 21, 2018 |
0 Comments
1168
This post was written by : Suganthini

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றத்துக்குத் தீர்வு காண சர்வதேச மத்தியஸ்தத்துக்கு, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு இஸ்ரேல் – பலஸ்தீன விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கிடையிலான பிரச்சினைக்குத் தீர்வு காண நேரடிப் பேச்சுவார்த்தையே சிறந்ததென இஸ்ரேல் தூதுவர் தெரிவித்துள்ளார்.

புனித நகரான ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த டிசெம்பரில் ஒருதலைப்பட்சமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்குமிடையில் பதற்றம் காணப்படுகின்றது. இந்நிலையில், இஸ்ரேல் – பலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை பலஸ்தீனம் விரும்பாத நிலையில், சர்வதேச மத்தியஸ்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg