Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபாயத்தில் இலங்கை! – மீண்டும் யுத்த சூழல்: மஹிந்த அணி

In இலங்கை
Updated: 11:52 GMT, Feb 21, 2018 | Published: 11:52 GMT, Feb 21, 2018 |
0 Comments
1725
This post was written by : Puvanes

இராணுவத்தினர் பயணித்த பேருந்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமானது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் என ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை மஹிந்த ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வரும் பொதுஜன பெரமுன கட்சி இன்று (புதன்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,

நாட்டில் முத்தசாப்சத்திற்கு மேலாக தொடர்ந்து வந்த யுத்தம் மஹிந்தவினால் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் கடந்த 9 வருடங்களுக்கு முன்னராக காணப்பட்ட யுத்த சூழல் நல்லாட்சியின் கவனக்குறைவின் காரணமாக மீண்டும் உருவாகியுள்ளது.

கடந்த யுத்த காலத்தில் பேருந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் காணப்பட்டன எனினும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட்டு நாடு அமைதியடைந்தது.

ஆனால் தற்போது மீண்டும் அதேபோன்றதொரு சூழல் உருவாகியுள்ளது. இன்று காலை பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு குண்டு வெடிப்பா என்ற சந்தேகங்களும் தோன்றியுள்ளன.

குறித்த பேருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தது எனக் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான உண்மைத்தகவல்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் .

மஹிந்தவினால் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் 9 வருடங்களாக காணப்பட்ட அமைதியும், சுதந்திரமும் இன்று காணாமல் போய்விட்டது. நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டது.

இதனால் நாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள அபாயநிலையில் இருந்து மீட்டெடுப்பதற்காக நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படல் வேண்டும் எனவும் ரஞ்சித் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg