Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் விமான விபத்து: 32 சடலங்கள் கண்டெடுப்பு

In உலகம்
Updated: 11:56 GMT, Feb 21, 2018 | Published: 11:56 GMT, Feb 21, 2018 |
0 Comments
1181
This post was written by : Suganthini

ஈரானில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களில், 32 பேரின் சடலங்களை இதுவரையில் கண்டெடுத்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் 60 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் மற்றும் 2 விமானிகளுடன் பயணித்த ஏ.ரி.ஆர். 72-500 எனும் இலக்கமுடைய விமானம், தெஹ்ரானுக்கும் தென்மேற்கு யசூஜ் நகருக்குமிடையிலான மலைப்பாங்கான பகுதியில் கடந்த 18ஆம் திகதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், அந்நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் மீட்புப்பணி தாமதமடைந்தது. இருப்பினும், தற்போது மீட்புப்பணி முன்னெடுக்கப்படும் நிலையில், இதுவரையில் 32 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாகவும், விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்புப்பணி தொடர்வதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சடலங்கள் பனிக்கட்டியினுள் உறைந்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏய்ஸ்மன் (Aseman) விமான சேவையினரால் இயக்கப்படும் மேற்படி விமானம், தெஹ்ரானிலுள்ள மெஹ்ராபாட் (Mehrabad) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சுமார் 50 நிமிடங்களில் றேடார்க் கண்காணிப்பிலிருந்து காணாமல் போன நிலையில் விபத்துக்குள்ளானது.

இதேவேளை, விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப்பெட்டி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg