Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு கௌட்டா பூமியிலுள்ள நரகம்: ஐ.நா

In உலகம்
Updated: 05:03 GMT, Feb 22, 2018 | Published: 05:03 GMT, Feb 22, 2018 |
0 Comments
1190
This post was written by : Elakkiya

சிரியாவின் கிழக்கு கௌட்டா நகரில் இடம்பெற்றுவரும் மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிழக்கு கௌட்டாவை ‘பூமியிலுள்ள நரகம்’ என்று விபரித்துள்ள ஐ.நா செயலாளர் நாயகம் மேற்படி வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

இதன்போது, கிழக்கு கௌட்டாவில் மோதல் முடிவடையும் என்று காத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இது எமது கண் முன்னால் வெளிப்படும் மனித சோகமாகும். இந்த கொடூரமான செயலை தொடர்ந்து அனுமதிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. போர் நிறைவு அவசர சிகிச்சை தேவைப்படும் மனிதாபிமான உதவியைப் பெறும் நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்ற அனுமதிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ரஷ்ய ஆதரவுடன் சிரிய அரச படைகள் கிழக்கு கௌட்டா பகுதியில் தொடர் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சிரிய தலைநகர் டமாஸ்கஸின் அருகிலுள்ள கிளர்ச்சியாளர்களின் இறுதி முக்கிய பகுதி இதுவாகும்.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள குறித்த பகுதியை விடுவிக்கும் முயற்சியில் தாம் ஈடுபடுவதாக சிரிய இராணுவம் கூறுகின்றது. எனினும் சிரிய படைகளின் தாக்குதல்கள் பொதுமக்களை இலக்காக கொண்டு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறிருக்க சிரிய நிலைவரம் தொடர்பில் விவாதிப்பதற்கு அவசர பாதுகாப்பு சபைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ரஷ்யா தெரிவிக்கின்றது.

இதற்கிடையில் மற்றொரு அரசு நட்பு நாடான ஈரான், சிரியா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகளுடன் கிழக்கு கௌட்டாவில் பதற்றறத்தை குறைக்க முயற்சிப்பதாக கூறுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg