Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணத்தில் நாளை ஆரம்பமாகும் பெரும் சமர்!

In விளையாட்டு
Updated: 10:08 GMT, Feb 22, 2018 | Published: 09:19 GMT, Feb 22, 2018 |
0 Comments
1111
This post was written by : Velauthapillai Kapilan

யாழ்ப்பாணத்தில் வளர்ந்துவரும் துடுப்பாட்ட அணிகளைக் கொண்ட  பாடசாலைகளான தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றின் அணிகள் மோதும் ‘பெரும் சமர்’ எனும் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

18ஆவது வருடமாக நடத்தப்படும் இத்துடுப்பாட்ட போட்டியானது ‘வீரர்களின் போர்’ என வர்ணிக்கப்படுகிறது. அனுபவ வீரர்களையும் புதுமுக வீரர்களையும் உள்ளடக்கிய மகாஜனா கல்லூரி அணியானது, இம்முறை சிறந்த சகலதுறை வீரர்களைக் கொண்டுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

முற்றிலுமாக இளைய வீரர்களை கொண்டிருக்கக்கூடிய ஸ்கந்தவரோதயா கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள், தமது அணியில் தேர்ச்சி பெற்ற வேகப்பந்து வீச்சாளர்களை லாவகமாக கைக்கொண்டு தமது வெற்றியாட்டத்தை அதிகரிக்க எதிர்ப்பார்க்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg