Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதிக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அடுத்த வாரம் ஆரம்பம்

In விளையாட்டு
Updated: 10:58 GMT, Feb 22, 2018 | Published: 09:50 GMT, Feb 22, 2018 |
0 Comments
1090
This post was written by : Velauthapillai Kapilan

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியின் பழைய மாணவர்களால் நடத்தப்படும் ஜனாதிபதிக் கிண்ண கால்பந்து தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.  கொழும்பு ரேஸ்கோஸ் மைதானத்தில்  நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கால்பந்து விளையாட்டை வளர்ப்பது, பங்கேற்பாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது என்பன இப்போட்டியின் நோக்கமென ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். அத்தோடு, தேசிய அணிக்கு திறமைகளை அடையாளம் காண இத்தொடர்கள் ஒரு காரணியாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை நடைபெறும் போட்டியில் 20 பாடசாலைகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. அதன்படி பங்கேற்கும் அணிகள் விபரம் வருமாறு.

கொழும்பு ஆனந்த கல்லூரி, டி மெசனோட் கல்லூரி – கதானை, கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி, மல்வானை அல் முபாரக் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி, கொழும்பு லும்பினி கல்லூரி, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி, இசிபதன கல்லூரி,  கம்பளை ஸாஹிரா கல்லூரி,  கொழும்பு நாலந்த கல்லூரி,  களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி, கொழும்பு ஸாஹிரா கல்லூரி , கொழும்பு புனித பேதுரு கல்லூரி, கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை,  மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி, கொழும்பு டீ.பி.ஜாயா ஸாஹிரா கல்லூரி, கொழும்பு வெஸ்லி கல்லூரி.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி திருகோணமலை மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகிய அணிகளும் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டபோதும் இந்த அணிகள் தமது பங்கேற்பை இன்னும் உறுதி செய்யவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

வழங்கப்படும் விருதுகள்:

  • சிறந்த வீரர் – போட்டியின் சிறந்த வீரர்
  • தொடரின் சிறந்த கோல் காப்பாளர் – தங்க கையுறை
  • தொடரில் அதிக கோல் போட்ட வீரர் – தங்க பாதணி
  • தொடரின் சிறந்த வீரர் – சிறந்த வீரருக்கான விருது
  • சிறந்த போட்டி உணர்வை வெளிப்படுத்திய வீரர் –  சிறந்த போட்டி உணர்வை வெளிப்படுத்தியதற்கான விருது
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg