Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பலமாகும் பெண் அமைச்சரின் இரகசியங்கள்! – கொழும்பில் அட்டகாசம்

In இலங்கை
Updated: 11:30 GMT, Feb 22, 2018 | Published: 11:30 GMT, Feb 22, 2018 |
0 Comments
1768
This post was written by : Puvanes

கொழும்பு – கொள்ளுபிடிய பகுதியில் உள்ள பிரபல கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தமிழ் அமைச்சர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் உள்ள வாடகை சொகுசு வீடு ஒன்றில் 28 வருடகாலமாக வர்த்தகர் ஒருவர் தனது குடும்ப சகிதம் வசித்து வந்த நிலையில் அண்மையில் வர்த்தகரும் அவர் குடும்பத்தினரும் அந்த வீட்டில் இருந்து  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறித்த குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்தில் வசித்துவரும் ஒருவருக்கு சொந்தமான வாடகை வீட்டிலேயே குறித்த வர்த்தகர் வசித்து வந்ததாகவும், அந்த வீட்டில் இருந்து வெளியேறும்படி ஏற்கனவே பல தடவைகள் வர்த்தகருக்கு எச்சரிக்கைகளும், அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதோடு, இன்று (வியாழக்கிழமை) மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள பிரபலம் ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த அமைச்சர் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg