Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் – ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை

In
Updated: 11:04 GMT, Feb 22, 2018 | Published: 11:04 GMT, Feb 22, 2018 |
0 Comments
1159
This post was written by : Elakkiya

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு மற்றும் இணையத் தாக்குதல் விவகாரங்களால் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகின்றது.

எனினும் குறித்த பொருளாதார தடை விவகாரம் சில சட்டரீதியான காரணங்களால் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக ட்ரம்ப் நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ரஷ்ய நிறுவனங்கள் இரண்டுக்கு எதிரான சில தடைகள் ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைனிலிருந்து கிரைமியாவை பிரித்து தம்முடன் இணைத்துக்கொண்டதிலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg