Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரக்பி தொடரில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கண்டி விளையாட்டுக் கழகம்

In விளையாட்டு
Updated: 12:49 GMT, Feb 22, 2018 | Published: 12:46 GMT, Feb 22, 2018 |
0 Comments
1134
This post was written by : Velauthapillai Kapilan

நடைபெற்று முடிந்த ரக்பி தொடரின் ‘டயலொக் க்ளிபர்ட்’ கோப்பையின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் சி. ஆர் அண்ட் எஃப்.சி அணியினை 38-26 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை கண்டி அணி மீண்டும் பெற்றுள்ளது.

நேற்றைய தினம் பல்லேகலயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், போட்டி ஆரம்பித்து ஆறு நிமிடங்களில் முதல் ட்ரையினை தனுஷ்க ரஞ்சன் கண்டி அணிக்காக வைத்தார். இதனை நைகல் ரத்வத்த மேலதிக புள்ளிகளுக்காக கன்வெர்சன் செய்யத் தவறியிருந்தார்.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களை கடந்ததும் செமால் விஜயசேகர மற்றும் ‘ரீசா ரபாய்தீன்’ ஆகியோர் மூலம் சி. ஆர். அண்ட் எஃப். சி. அணிக்கான ட்ரைகள் பெறப்பட்டு அவை வெற்றிகரமாக கன்வெர்சன் செய்யப்பட்டிருந்தன.

போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிவந்த கண்டி அணியை வீழ்த்த ‘சி.ஆர் அண்ட் எஃப்.சி’ அணிக்கு இந்த ட்ரைகள் மூலம் கிடைத்த புள்ளிகள் போதுமாக இருக்கவில்லை.

தொடர்ந்து திலின விஜேசிங்க பெற்றுக்கொண்ட பெனால்டி புள்ளிகளின் மூலம் க்ளிபர்ட் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றாக கண்டி உறுதிப்படுத்திக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கண்டி அணியுடன் கடற்படை விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது,

 

  • முதற்பாதி ஆட்டத்தில்  கண்டி விளையாட்டுக் கழகம் – 22

சி ஆர் அண்ட் எஃப் சி – 07 

  • முழு நேரம் ஆட்ட முடிவில் கண்டி விளையாட்டுக் கழகம் – 38 (5T,1C,3P)

சி ஆர் அண்ட் எஃப் சி – 28 (4T,4C)  

நடைபெற்று முடிந்த ‘டயலொக் க்ளிபர்ட்’ ரக்பி தொடரில் அணி ரீதியாக பெற்றுக்கொண்டவர்களின் புள்ளிகள்

கண்டி விளையாட்டுக் கழகம்

தனுஷ்க ரஞ்சன் (3T), சிறினாத் சூரியபண்டார (1T), கயான் வீரரத்ன (1T), நைகல் ரத்வத்த (1C,2P), திலின விஜேசிங்க (1P)

சி ஆர் அண்ட் எஃப் சி விளையாட்டுக் கழகம்

சானக்க சந்திமால் (1T), ஒமல்க குணரத்ன (1T), செமால் வீரசேகர (1T) ,ரீசா ரபாய்தீன் (1T), தரிந்த ரத்வத்த (4C)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg