Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உர மானியம் தொடர்பில் புதிய கொள்கை – ஜனாதிபதி ஆலோசனை

In இலங்கை
Updated: 18:29 GMT, Feb 22, 2018 | Published: 18:29 GMT, Feb 22, 2018 |
0 Comments
1144
This post was written by : Litharsan

உர மானியம் தொடர்பாக புதியதொரு கொள்கையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவுள்ளதாக தேசிய பொருளாதார சபை அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையில் குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் பின்னர் முதல் தடவையாக தேசிய பொருளாதார சபை நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடியது. இச்சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

உர மானியம் வழங்குதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள இரண்டு பிரதான பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் தற்போது பணமாக வழங்கப்படும் உர மானிய முறையில் திருத்தம் செய்யவும், எதிர்காலத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கவும் இதன்போது முடிவெடுக்கப்பட்டது.

விவசாயிகளின் உரத் தேவையைப் பூர்த்திசெய்வதுடன், விவசாய நிலங்கள் மாசடையாது பாதுகாக்கவும் பொருத்தமானதொரு செயற்திட்டத்தைத் தயாரிக்குமாறு தேசிய பொருளாதார சபைக்கும் விவசாய அமைச்சுக்கும் இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

தேசிய பொருளாதார சபையினால் எதிர்வரும் சில வாரங்களுக்குள் மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கையின் ஏனைய பொருளாதார விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால பொருளாதார கொள்கைகளை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg