Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிட்சர்லாந்து விமானம்

In ஐரோப்பா
Updated: 05:27 GMT, Feb 23, 2018 | Published: 04:10 GMT, Feb 23, 2018 |
0 Comments
1139
This post was written by : Velauthapillai Kapilan

ஸ்பெயின் – பார்சிலோனா நகரில் இருந்து சூரிச் வந்த விமானமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘பிரான்ஸில்’ தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்சிலோனா நகரில் இருந்து ‘LX 1957’ என்ற விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ள வேளையில் விமானத்தின் காக்பிட்டில் இருந்து வித்தியாசமான வாசம் வந்தது மட்டுமன்றி கட்டுப்பாட்டு கருவிகளில் இருந்து எச்சரிக்கை செய்தியும் வெளியாகியதை அடுத்து இவ் விமானம் அவசர அவசரமாக பிரான்ஸ் நாட்டின் ‘மார்ஸைல்’ நகர விமான நிலையத்தில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது.

மேலும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகத நிலையில் பயணிகள் அனைவரையும் மார்ஸைல் நகரில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்க வைத்துள்ளதாகவும், வெள்ளியன்று காலை வேறு விமானத்தில் பயணிகள் அனைவரும் சூரிச் நகருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என சுவிஸ் விமான சேவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg