Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பி.எஸ்.எல்: சங்காவின் அதிரடியுடன் வெற்றி கணக்கை தொடங்கியது முல்தான் அணி

In கிாிக்கட்
Updated: 05:18 GMT, Feb 23, 2018 | Published: 04:24 GMT, Feb 23, 2018 |
0 Comments
1528
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரின், மூன்றாவது அத்தியாயத்தின் முதல் லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், பெஷாவர் ஸால்மி அணியும், முல்தான் சுல்தான்ஸ் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முல்தான் சுல்தான்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக மொஹமட் ஹபீஸ் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் இர்பான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து, 152 வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணி, சங்காவின் அதிரடியின் மூலம் 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சங்கக்கார 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள், மூன்று பவுண்ரிகள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg