Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல்: தமிழர் ஒருவர் போட்டி

In விளையாட்டு
Updated: 06:46 GMT, Feb 23, 2018 | Published: 06:46 GMT, Feb 23, 2018 |
0 Comments
1097
This post was written by : Anojkiyan

கடந்த ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

மாலை 4 மணியளவில் விளையாட்டுத்துறை அமைச்சில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் வாக்களிக்க 31 சங்கங்கள் தகுதிபெற்றுள்ளன.

இம்முறை தேசிய ஒலிம்பிக் சங்கத் தலைமைப் பொறுப்பிற்கு சுரேஷ் சுப்ரமணியமும், ரொஹான் பெர்னாண்டோவும் போட்டியிடுகின்றனர்.

இதுதவிர தலைவரைத் தவிர உப தலைவர்கள், செயலாளர், பொருளாளர் என 12 பதவிகளுக்கான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

தற்போதைய தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வரும் மெக்ஸ்வெல் டி சில்வா, சுரேஷ் சுப்ரமணியம் தலைமையிலான அணியின் அதே பதவிக்கு போட்டியிடுகின்றார்.

சுரேஷ் சுப்ரமணியம் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் ஆசிய டென்னிஸ் சங்கத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ரொஹான் பெர்னாண்டோ படகோட்டி விளையாட்டு சங்கத்தின் தலைவராக உள்ளார்.

அதேவேளை தற்போதைய ஒலிம்பிக் சங்கத் தின் நிதியியல் குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg