Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு கௌட்டாவில் போர்நிறுத்தம் அவசியம்

In உலகம்
Updated: 06:19 GMT, Feb 23, 2018 | Published: 06:19 GMT, Feb 23, 2018 |
0 Comments
1127
This post was written by : Elakkiya

சிரியாவில் தொடர் மோதல் இடம்பெற்றுவரும் கிழக்கு கௌட்டா பகுதியில் போர்நிறுத்தத்தின் அவசியத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை உறுதிப்படுத்த வேண்டும் என சிரிய நெருக்கடிகளுக்கான ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் PANOS MOUMTZIS  தெரிவித்துள்ளார்.

கிழக்கு கௌட்டா பகுதியில் கடந்த சில தினங்களாக சிரிய அரச தரப்பினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை குறைந்தது கிழக்கு கௌட்டா பகுதியில் கடந்த சில தினங்களாக சிரிய அரசதரப்பினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை குறைந்தது 370 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மோதல் பகுதியிகளில் பெருமளவான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிரிய நெருக்கடிகளுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளர், “கடந்த 72 மணித்தியாலங்களில் வெளியாகிய கிழக்கு கௌட்டா பகுதி அனைத்து ஒளிப்படங்களும் அங்கு போர்நிறுத்தத்தின் தேவையை உணர்த்துகின்றன.

பாதுகாப்பு சபை உறுப்பினர்கள், மாநிலங்கள் அங்கு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தப்போவதில்லை எனில், உண்மையில் அங்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. கிழக்கு கௌட்டாவை பார்க்கும் போது உண்மையில் ஒரு தீவிர நிலைமையாக உள்ளது. இந்த நிலைமை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது” என்று தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு கௌட்டாவில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் அங்கு கடுமையாக நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை வெளியேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg