Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்: பரபரப்பான போட்டியில் நோர்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தியது மும்பை அணி

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:23 GMT, Feb 23, 2018 | Published: 09:23 GMT, Feb 23, 2018 |
0 Comments
1125
This post was written by : Anojkiyan

4வது இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின், மும்பை எப்.சி. அணி மற்றும் நோர்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கிடையிலான போட்டியில், மும்பை எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின.

இப்போட்டியில் மும்பை அணி 15வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து உள்ளூர் இரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த கோலை அர்ச்சிலி எமானா அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நோர்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் லூசியன் கோலன் 24வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்பிறகு சாம்பின்ஹா 43வது நிமிடத்திலும் ஒரு கோலடித்தார். இதனால் போட்டியின் முதல் பாதியில் நோர்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து, நடந்த இரண்டாவது பாதியில் மும்பை அணி, 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. அந்த கோலை சாண்டொஸ் புகுத்தினார். இதனால் கோல் கணக்கு சமநிலை பெற்றது. இறுதியில் லூசியன் கோலன் வெற்றி கோலை அடித்து அணியை வெற்றிபெறசெய்தார். இதனடிப்படையில் மும்பை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மும்பை எப் சி அணி, 7 வெற்றி, 2 சமநிலை, 7 தோல்வியுடன் 23 புள்ளிகள் எடுத்து பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. நோர்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 11 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg