Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரி-ருவென்ரி போட்டி தோல்விகள் நம்பிக்கையை சிதைக்காது: வில்லியம்ஸன்

In கிாிக்கட்
Updated: 07:49 GMT, Feb 24, 2018 | Published: 07:49 GMT, Feb 24, 2018 |
0 Comments
1141
This post was written by : Elakkiya

ரி-ருவென்ரி கிரிக்கட்டில் அண்மையில் ஏற்பட்ட தோல்விகள் ஒருநாள் போட்டிக்கான தமது நம்பிக்கையை சிதைக்காது என நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.

ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி வரை நியூஸிலாந்து அணி வெற்றிகளை காணவில்லை. ஏழு போட்டிகளில் ஒருமுறை மாத்திரமே வென்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வில்லியம்ஸன், ” நாம் தற்போது ரி-ருவென்ரியில் கீழிறங்கிச் செல்கின்றோம் என்று நினைக்கின்றேன். ஒருநாள் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம். திட்டங்கள் வேறுபட்டவை. எனவே நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி கடுமையான சவாலாக அமையும் என்று எமக்கு தெரியும். ஆனால் அண்மைக்கால தோல்விகள் எமது நம்பிக்கையை சேதப்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg