Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விராட் கோஹ்லியிடமிருந்து கற்றுக் கொள்ளும் ஸ்டீவ் ஸ்மித்

In கிாிக்கட்
Updated: 09:05 GMT, Feb 24, 2018 | Published: 09:04 GMT, Feb 24, 2018 |
0 Comments
1187
This post was written by : Elakkiya

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியிடமிருந்து துடுப்பாட்ட நுணுக்கங்களை கற்றுக் கொள்வதாக அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, “உலகின் சிறந்த வீரர்களிடமிருந்து எதனைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதனை நான் கற்றுக் கொள்கின்றேன். சில நேரங்களில் அவர்களைப் போலவே துடுப்பெடுத்தாடவும் முயற்சிப்பேன்.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது கைகளை எவ்வாறு வைத்திருப்பது, ஓவ் சைட்டில் பந்தை அடிப்பது எவ்வாறு என்பது தொடர்பான சில நுணுக்கங்களை விராட் கோஹ்லியிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். அதேபோன்று டி வில்லியர்ஸிடமிருந்தும் சில விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.

நியூஸிலாந்து அணித்தலைவர் கனே வில்லியம்ஸன் போன்று பந்தை தாமதமாக எதிர்கொள்வது எவ்வாறு என்பதை சில ஆண்டுகளுக்கு முன்னர் முயற்சித்து பார்த்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg