Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பழங்குடியின வாலிபர் அடித்து கொலை – இதுவரையில் 7 பேர் கைது

In இந்தியா
Updated: 11:51 GMT, Feb 24, 2018 | Published: 11:49 GMT, Feb 24, 2018 |
0 Comments
1463
This post was written by : Velauthapillai Kapilan

கேரள மாநிலத்தில் பழங்குடியின வாலிபரின் அடித்து கொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டவர் கேரள – முக்காலி கிராமத்தைச் சேர்ந்த மது (வயது 27) சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஆதிவாசி இனத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வசித்து வந்தார்.

வழக்கம்போல கடந்த வியாழக்கிழமை மாலை கிராமத்திற்கு சென்று உணவு பொருட்கள் மற்றும் அரிசி ஆகியவற்றை வாங்கி விட்டு காட்டுப்பகுதிக்கு சென்றபோது திருடன் என நினைத்து அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து கொலை செய்தனர்.

இக்கொலை தொடர்பில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்நிலையில் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட மதுவின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும் என அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

மேலும் இக் கொலை தொடர்பில் கருத்து தெரிவித்த நலத்துறை மந்திரி ஏ.கே. பாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg