Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனித புத்தர் கூறும் வெற்றிக்கான வழி…

In
Updated: 13:32 GMT, Feb 24, 2018 | Published: 13:32 GMT, Feb 24, 2018 |
0 Comments
1237
This post was written by : Puvanes

தான் புத்தநிலையை அடைந்த ஒரு மனிதன் எனக்கூறி மனிதர்கள் அனைவராலும் இந்தப் புத்தநிலையை அடையமுடியும் எனவும் கூறி அதனை அனைவருக்கும் எடுத்துக் கூறியவரே கௌதம புத்தர்.

இந்த புத்திநிலையை அடைய அவர் கூறும் வழிமுறைகளில் பிரதானமானதே மனதை ஒருமுகப்படுத்தும் ‘பாவனா எனப்படும் பயிற்சியாகும்.

ஒவ்வோர் மனிதனிடமும் இருவகையான குறைகள் உண்டு ஒன்று உடற்பிணி மற்றது மனப்பிணி. ஒரு மனிதன் உடற்பிணியின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழமுடியும் ஆனால் மனதில் பிணி நேருமிடத்தில்தில் அவனால் வாழ முடியாது எனவும் புத்தர் கூறுகின்றார்.

அவ்வாறான மனப்பிணியைப் போக்கும் வழியாக புத்தர் பாவனாவை போதிக்கின்றார். காவனா அல்லது பாவனை எனப்படுவது பயிற்சி அல்லது வளர்த்தல் எனப் பொருள்படுத்தலாம். இந்த பாவனாவின் நோக்கம் மனப்பிணியையும், உடற்பிணியையும் போக்கி மனிதில் உள்ள களங்கங்களை நீக்கிக் கொள்வதே ஆகும்.

பாவனா எனப்படுவது இருவகைப்படும் ஒன்று சமத மற்றையது விதர்சனா என வகைப்படுத்தப்படுகின்றது. பரிநிர்வாண நிலையை அடையும் பழமைவாய்ந்த பௌத்த தியான முறையே பாவனாவாகும்.

புத்தர் ஞானம் பெற்றுக்கொள்வதற்று சமத தியான முறையினையே பின்பற்றி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சாமாதி நிலையில் பரிநிர்வாணம் பெற்றுக்கொள்ள முடியாத புத்தர் சமத முறையினைப் பின்பற்றி கடைசியில் வெற்றி பெறுகின்றார்.

”இந்தத் தியானம் சாந்தமான வாழ்வைத் தந்தது. இந்தப் பிறவியின் சுகத்தை அருளியது. அதற்கு மேல் அவை எதனையும் தரவில்லை என புத்தர் கூறியுள்ளார். அதன்பின்னர் பரிநிர்வாண நிலையை அடையக்கூடியதும் பூரண விடுலையைத் தரக்கூடியதுமான ‘விதர்சனா” எனும் தியான முறையைப் புத்தர் அறிந்து கொண்டது மட்டுமல்லாமல் அதனை உலகுக்கும் போதித்துள்ளார்.

மனித உடல் காற்று, நீர், நெருப்பு, மண் ஆகிய நான்கு பூதங்களினால் உருவாக்கப்பட்டது. மனித மனமும் நான்கு பிரிவுகளைக் கொண்டது. உணர்வையும் உணர்ச்சியையும் உள்ளடக்கிய வேதனை என்பது ஒன்றாகவும் நுகர்வு எனப்படும் சஞ்ஞா இரண்டாவதாகவும் நினைவு, கற்பனை போன்ற மனஎழுச்சிகளை உள்ளடக்கிய சங்காரம் மூன்றாவதாகவும் தன்னுணர்வு, தன்னுணர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய விஞ்ஞானம் நான்காவதாகவும் உள்ளன.

உடலையும் அதின் மாற்றங்களையும் அவதானிப்பதுபோல் மனதையும் அதில் தோன்றும் உணர்வுகளையும் மாற்றங்களையும் அவதானிப்பது “பாவனா” தியானமுறையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

மனதில் உள்முகமாகவோ புறமுகமாகவோ அல்லது இரண்டிலுமோ தோன்றும் மனஉணர்வுகளை உற்றுநோக்கி உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்விதம் பயிற்சி செய்யும் ஒருவர் ஒன்பது வகையான மனநிலைகள் இருப்பதை உணர்ந்து கொள்கின்றார்.

நாளாந்த இன்ப துன்பங்களுடனும் பேச்சு, சிந்தனை, ஒழுக்கம், விவேகம் சார்ந்த அம்சங்களுடனும் ‘பாவனா” தியான முறை தொடர்புபட்டது. பௌத்த மதத்தில் விளக்கப்பட்டிருக்கும் தியான முறையை கைக்கொள்ளும்போது அவரவர் உடல்நிலைக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்றவாறு கதிரையில் இருந்துகொண்டோ அல்லது கட்டிலில் படுத்திருந்தோ, நின்றவாறாகவோ அல்லது தரையில் உட்காந்தவாரோ அவரவர் வசதிப்படியும் விருப்பப்படியும் செய்யலாம்.

வாழ்வின் துயரங்களை அகற்றி வெற்றி பெறுவதற்கும், ஆசை எனும் துயரத்தில் இருந்து விடுபடவும் புத்தர் போதித்த பாவனா முறையினைப் பின்பற்றும் போது பரிநிர்வாண நிலையினை அடைய முடியும் என்பது அவர் வாக்கு.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg