Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகிற்கே அரசனாகும் இயேசு…

In
Updated: 13:38 GMT, Feb 24, 2018 | Published: 13:38 GMT, Feb 24, 2018 |
0 Comments
1172
This post was written by : Puvanes

இயேசு உலகின் தலைவராக, மன்னனாக வரும் போது தனக்கு கிடைக்கும் அதிகாரத்தினை எவ்வாறு பயன்படுத்துவார் என்பதனை அவர் அற்புதங்கள் மூலமாகவே எடுத்துரைக்கின்றார்.

ஒரு சாமானியனால் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் வல்லமையினை கடவுள் இயேசுவிற்கு வழங்குகின்றார். கடவுள் வழங்கிய சக்திகளை இயேசு தனது அற்புதங்கள் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

பசி பட்டினியைப் போக்க தண்ணீரைத் தித்திக்கும் திராட்சை மதுவாக மாற்றியதே இயேசு செய்த முதல் அற்புதம். வேறு இரண்டு சந்தர்ப்பங்களில், சில ரொட்டிகளையும் மீன்களையும் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் பசியை போக்கினார், இத்தனைக்கும் எல்லாரும் சாப்பிட்டதுபோக மீதமும் இருந்தது.

“எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும்” இயேசு குணப்படுத்தினார். அனைத்து உபாதைகளிலிருந்தும் மக்களுக்கு விடுதலை அளித்தார். கைகால் முடமானவர்களையும் சுகப்படுத்தினார். அவருடைய வல்லமைக்கு மிஞ்சிய வியாதி எதுவுமே இருக்கவில்லை.

ஒருமுறை இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் கலிலேயாக் கடலைக் கடந்துகொண்டிருந்தபோது பலத்த புயல்காற்று வீசியது. சீடர்கள் திகிலடைந்தார்கள். இயேசுவோ புயல்காற்றைப் பார்த்து, “உஷ்! அமைதியாக இரு!” என்றார். அப்போது மிகுந்த அமைதி உண்டானது. (மாற்கு 4:37-39) மற்றொரு சந்தர்ப்பத்தில், கடும் புயல்காற்று வீசியபோது அவர் தண்ணீர்மீது நடந்து வந்தார்.

மனிதர்களைவிட பேய்கள் சக்தி வாய்ந்தவை. கடவுளுடைய கொடிய எதிரிகளான இந்தப் பேய்களின் கோரப்பிடியிலிருந்து—அன்றும் சரி இன்றும் சரி—மக்களால் வெளியே வரமுடியவில்லை. ஆனால் இயேசு பல சந்தர்ப்பங்களில், மனிதர்களைப் பிடித்த பேய்களை வெளியே வரும்படி கட்டளையிட்டார்.

அதன்பின் அந்தப் பேய்களால் அவர்களை ஆட்டிப்படைக்க முடியவில்லை. பேய்களைக் கண்டு இயேசு அஞ்சவில்லை, மாறாக அதிகாரமுள்ள இயேசுவைக் கண்டு அந்தப் பேய்கள்தான் அஞ்சி நடுங்கின.

“கடைசி எதிரி” என பொருத்தமாகவே அழைக்கப்படும் மரணத்தை எந்த மனிதனாலும் வெல்ல முடியாது. (1 கொரிந்தியர் 15:26) ஆனால், இறந்தவர்களை இயேசு உயிர்ப்பித்தார். ஒரு விதவையின் இளம் மகனையும், ஒரு சிறு பெண்ணையும் உயிர்ப்பித்து அவர்களுடைய பெற்றோரின் நெஞ்சைக் குளிரவைத்தார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஜனக்கூட்டத்தின் கண்முன்னாலேயே தமது நெருங்கிய நண்பன் லாசருவை உயிர்த்தெழுப்பினார், அதுவும் அவர் இறந்து கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்து! இயேசுவைக் கொலைசெய்ய துடியாகத் துடித்துக்கொண்டிருந்த எதிரிகளும்கூட அவர் செய்த இந்த அற்புதத்தை மறுக்கவில்லை.(யோவான் 11:38-48; 12:9-11)

இயேசு தன் அற்புதங்கள் மூலம் மனிதர்களுக்கு நம்பிக்கை விதைக்கின்றார். இந்த அற்புதங்களை படைக்கவும், பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்தவும் கடவுள் தனக்கு அதிகாரங்களைக் கொடுத்துள்ளார், அந்த அதிகாரங்களின் மூலம் இயேசு மக்களைக் காப்பாற்றி வருகின்றார் என்பதையும் நிரூபித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg