Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

27 பெண்களை மணந்து சிவன் காலடியில் வீழ்ந்த சந்திரன்!

In
Updated: 13:47 GMT, Feb 24, 2018 | Published: 13:47 GMT, Feb 24, 2018 |
0 Comments
1218
This post was written by : Puvanes

சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களில் சோமவார விரதம் முக்கியமானது. சோகங்கள் தீர்க்கும் விரதங்களுள் சிறப்பானதாக இந்த சோமவார விரதம் கருதப்படுகின்றது.

அஷ்ட மகா விரதங்களுள் சிவனுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய விரதங்களுள் முக்கியமானதில் இந்த விரதம் முதன்மையானது என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த சோமவார விரதம் இத்தகைய முக்கியத்துவம்பெறக் காரணம் என்ன? இது உருவான கதை…

பிரஜாபதி தட்சனுக்கு அறுபது பெண்கள். அவர்களுள் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர கன்னிகளும் சந்திரனை மணமுடிக்க விரும்புகின்றனர். விருப்பத்தின் பின்னராக தவத்தின் காரணமாக தட்சனின் ஆசிர்வாதத்தோடு திருமணங்கள் இனிதே நடைபெறுகின்றது.

திருமணமான ஆரம்பத்தில் அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்ட சந்திரன் நாட்கள் செல்லச் செல்ல ரேவதியிடம் மட்டும் அதிக அன்பும் காதலையும் காட்டி, மற்றவர்களை ஒதுக்க ஆரம்பிக்கின்றார்.

இந்த ஒதுக்கலால் மனமுடைந்த ஏனைய 26 பெண்களும் துயரும் மறுபக்கம் பொறாமையும் கொண்டு தன் தந்தையிடம் முறையிடுகின்றனர். சந்திரன் வாக்குறுதி மறந்ததால் தன் புதல்விகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை கண்டு தட்சன் வருத்தம் கொள்கின்றான் அதனைவிட ஆத்திரமும் அடைகின்றார்.

அதன் தொடர்ச்சியாக தட்சன் சந்திரனிடம் “அனைத்து மனைவிகளிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுக்க சந்திரனும் அதனை ஏற்றுக்கொண்டு நடக்கத் தொடங்கினாலும், மீண்டும் பழைய கதை தொடர்கின்றது. சந்திரன் மீண்டும் ரேவதியிடம் மாத்திரமே நாட்டம் கொள்ள ஆரம்பிக்கின்றார்.

விளைவு மீண்டும் தட்சனிடம் முறைப்பாடு செல்கின்றது. கோபம் கொண்ட தட்சன் “கொடிய நோய் தோற்றி அழகு மற்றும் தேஜஸ் அனைத்தையும் இழக்க” சந்திரனுக்கு சாபமிட, சந்திரன் பலவீனமாகி, அழகை இழந்து மிகுந்த துன்பத்திற்குள்ளாகின்றார்.

சந்திரன் தேவர்களிடம் முறையிட அவர்கள் அவனை பிரம்மனிடம் அழைத்துச் சென்றனர். பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி புண்ணியத் தலமான பிரபாசத்திற்குப் போய் பரமசிவனை வணங்கினால் அவர் அவனது குறையை நீக்குவார் என்று கூறி மறைந்தார் .

சந்திரனும் உடன் பிரபாசத்திற்கு சென்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரித்து இந்த சோமவார விரதம் பின்பற்றி ஈசனை வணங்கினான்.

சந்திரனின் பக்தியில் நெகிழ்ந்த சிவன் அவனுக்கு அருள் புரிய திருவுள்ளம் கொண்டார். எனவே ,ஒரு மாதத்தில் பதினைந்து நாட்கள் சந்திரனின் கலைகள் குறைந்து மீதிப் பதினைந்து நாட்களில் அது மீண்டும் வளர பரமன் அருள் புரிந்து அவனை அவரது சிரசில் சூடி சந்திரசேகரர் / சோமசுந்தரர் ஆனார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg