Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனித மூளை பற்றிய ஆச்சரியமானதோர் உண்மை!

In
Updated: 13:59 GMT, Feb 24, 2018 | Published: 13:59 GMT, Feb 24, 2018 |
0 Comments
1074
This post was written by : Puvanes

மனித மூளையில் சுமார் 2.5 பி.டி (Petebyte) அளவு கொண்ட தகவல்களை பதிவு செய்ய முடியும் என்ற ஆச்சரியமானதோர் விடயத்தினை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

மனித மூளையில் எந்தளவு தகவல்களை பதிவு செய்ய முடியும் என்ற ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அது சுமார் 100 டி.பி (Terabyte) அளவு சேமிப்பு ஆற்றல் கொண்டது என ஆரம்பத்தில் தெரிவித்தனர்.

எனினும் இது மிகக் குறைந்தபட்ச அளவு எனக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள் மூளையானது 2500 டி.பி (Terabyte) அளவினையும் விட அதிகமான சேமிப்பு ஆற்றல் கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி மனித மூளையில், 342 வருடங்களுக்கும் அதிகமான சின்னத்திரை நாடகங்களை பதிவுசெய்ய முடியும் எனவும், 4800 வருடங்களுக்கும் அதிகமான வருடங்கள் இடைவிடாது தொடர்நது கேட்கக் கூடிய பாடல்களையும் கூட பதிவு செய்ய முடியும் எனக் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் மனிதர்கள் தமது மூளையின் சிறிதளவு ஆற்றலை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg