Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் 30 நாள் யுத்தநிறுத்தம் அமுல்

In உலகம்
Updated: 04:00 GMT, Feb 25, 2018 | Published: 04:00 GMT, Feb 25, 2018 |
0 Comments
1160
This post was written by : Suganthini

சிரியாவில் 30 நாள் யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்புச் சபை ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், ஜிஹாடிஸ்ட் போராளிக் குழுக்களும் அக்குழுவினரின் கூட்டாளிகளும் இந்தத் தற்காலிக யுத்தநிறுத்தத்தின் கீழ் வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவின் கிழக்கு கௌட்டாப் பகுதி, போராளிக் குழுவினரின் பிடியிலுள்ள நிலையில், அப்பகுதியை மீட்கும் நோக்கில் அரசாங்கப் படையினர் கடந்த 18ஆம் திகதி முதல் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் மோதல் உக்கிரமடைந்த நிலையில், படையினர் விமானத் தாக்குதல், ஷெல் மற்றும் ரொக்கட் தாக்குதல்களை கடந்த வாரம் நடத்தியிருந்தனர். இதில் அகப்பட்டு சுமார் 500 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கிழக்கு கௌட்டாவில் மோதலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கிலும், காயமடைந்தவர்களை சிகிச்சை அளிப்பதற்காக வெளியேற்றும் நோக்கிலும், சிரியாவில் யுத்தநிறுத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, சிரியாவில் யுத்தநிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்புச் சபை  நேற்று (சனிக்கிழமை)  ஒப்புதல் அளித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg