Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகம்: இஸ்ரேல் பிரதமர் வரவேற்பு

In உலகம்
Updated: 04:44 GMT, Feb 25, 2018 | Published: 04:44 GMT, Feb 25, 2018 |
0 Comments
1134
This post was written by : Suganthini

இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை எதிர்வரும் மே மாதம் ஜெருசலேமில் திறக்கவுள்ளமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேமில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்துக்கு அவர் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ரெல் அவ்விலிருந்து ஜெருசலேமுக்கு மாற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானம், எமது சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்வு மேலும் மகிழ்ச்சிக்குரியதாக மாற வழிவகுக்குமென்பதுடன், இது இஸ்ரேல் அரசாங்கத்துக்கு சிறந்த தருணமாகும். எனவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தலைமைத்துவ நடவடிக்கைக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்’ என்றார்.

இஸ்ரேலின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு, இந்த வருடம் மே 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமில் திறக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

மேலும், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி; ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக கடந்த 2017ஆம் ஆண்டு டிசெம்பர் 6ஆம் திகதி அங்கிகரித்தமை, வரலாற்று நடவடிக்கையென, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படவுள்ளமைக்கு பலஸ்தீனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg