Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க மண்ணில் சாதனை படைத்த இந்திய மகளிர் அணி!

In கிாிக்கட்
Updated: 07:20 GMT, Feb 25, 2018 | Published: 07:20 GMT, Feb 25, 2018 |
0 Comments
1140
This post was written by : Litharsan

தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 ஆவது ரி-20 போட்டியில் 54 ஓட்டங்களால் தென்னாபிரிக்காவைத் தோற்கடித்து 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. அந்தவகையில் இருவேறு தொடர்களில் தொடரைக் கைப்பற்றிய இந்திய மகளிர் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

தென்னாபிரிக்காவின் ஹப்டவுனில் நேற்று (சனிக்கிழமை) இந்தப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தெக்காபிரிக்க அணி மதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்க்ள நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் எம்.ராஜ் 62 ஓட்டங்களையும், ரொட்சிஜஷ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஹப், கஹா மற்றும் ஸ்மைல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

167 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடு்ததாடிய தென்னாபிரிக்க அணி 18 ஓவர்க்ள நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 மாத்திரமே பெற்று 54 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. தென்னாபிரிக்க அணி சார்பில் ஹப் 27 ஓட்டங்களையும், ரியோன் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பான்டே, ஆர் தர் மற்றும் கயாஹ்வத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பூனம் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகியாக மிதாலி ராஜ் தெரிவுசெய்யப்பட்டதொடு தொடரின் நாயகியாகவும் மிதாலி ராஜ் தெரிவானார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg