Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர்கால ஒலிம்பிக்கில் நோர்வே புதிய சாதனை!

In விளையாட்டு
Updated: 08:24 GMT, Feb 25, 2018 | Published: 08:24 GMT, Feb 25, 2018 |
0 Comments
1148
This post was written by : Litharsan

தென்கொரியாவில் இடம்பெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கப் பதக்கங்களை வென்று நோர்வே சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் தற்போது வரை நோர்வே முதலிடத்தில் உள்ளது. 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் உள்ளடங்கலாக 39 பதக்கங்களை நோர்வே பெற்றுள்ளது.

அதற்கடுத்தபடியாக ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி மற்றும் 7 வெண்கலமாக மொத்தம் 31 பதக்கங்களுடன் இரண்டவாது இடத்திலும் கனடா 11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் உள்ளடங்கலாக 29 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலுள்ளது.

அத்துடன் 23 பதக்கங்களுடன் அமெரிக்காவும், 20 பதக்கங்களுடன் நெதர்லாந்தும் முறையே 5 ஆம் மற்றும் 6 ஆம் இடங்களில் உள்ளன.

இதற்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா 37 பதக்கங்களை (தங்கம்-9, வெள்ளி-15, வெண்கலம்-11) வென்றமையே அதிக பட்ச பதக்கங்கள் வென்ற நாடாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg